FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் அதிகம் தேவை: மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் பெண் படைப்பாளர்கள் குறித்து பேசியுள்ளார்...

Updated On : 25 ஜூலை 2026, 8:31 pm IST
நடிகை மாளவிகா மோகனன். - படம்: எக்ஸ் / மாளவிகா மோகனன்.
பகிர்:

நடிகை மாளவிகா மோகனன் பெண் படைப்பாளர்களின் தேவை அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

நடிகை நடிகை மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர் படத்தில் அறிமுகமானார். பின்னர், தங்கலான், ஹிருதயப்பூர்வம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். இதனால், மலையாளம், தமிழிலும் முன்னணி நடிகையாக பிரபலமடைந்துள்ளார்.

தற்போது, சர்தார் 2, பாக்கெட் நாவல் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மாளவிகா மோகனன், “இந்தியாவில் பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. பெண் படைப்பாளர்கள் அதிகரித்தால் அதற்கான காத்திரமான கதைகளும், சண்டைக்காட்சிகளும் உருவாகும். நம்மூர் சினிமாவிலும் கில் பில் போன்ற நாயகிகளை மையமிட்ட ஹாலிவுட் தர திரைப்படங்களை எடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Malavika Mohanan has stated that there is a great need for female creators.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments