வேட்டையன் அப்டேட்!
வேட்டையன் அப்டேட் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் நாளை (ஆக.19) காலை 10 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் இதன் முதல் பாடல் அல்லது டீசர் குறித்த அறிவிப்பாக இது இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.