FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

’கேவலமான மனிதர்கள்..’ கூவத்தூர் குற்றச்சாட்டுக்கு த்ரிஷா பதிலடி!

தன் மீதான குற்றச்சாட்டுக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.

Updated On : 20 பிப்ரவரி 2024, 6:19 pm IST
பகிர்:

நடிகை த்ரிஷா 96 படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன், ரோட், லியோ ஆகிய படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏவி ராஜு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேறியதும், ஆட்சியைக் காப்பாற்ற தன் ஆதரவு எம்எல்ஏக்களை சசிகலா 10 நாள்கள் கூவத்தூரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

Advertisement

Advertisement

அதைக் குறிப்பிட்டு பேசிய ராஜு, “கூவத்தூரில் எத்தனை நடிகைகளைக் கூட்டி வந்தார்கள் தெரியுமா? அதில் எம்எல்ஏ வெங்கடாசலம் நடிகை திரிஷாதான் வேண்டும் என அடம்பிடித்தார். அதனால், நடிகர் கருணாஸ் ரூ.25 லட்சம் கொடுத்து த்ரிஷாவை கூவத்தூருக்கு அழைத்து வந்தார். இன்னும் நிறைய நடிகைகள் வந்தார்கள்.” எனக் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டு த்ரிஷா ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், எக்ஸ் தளத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் செல்லக்கூடிய கேவலமான மனிதர்களைத் திரும்ப திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனி செய்ய வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் என் சட்டப்பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள்.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தன்னைக் குறித்து ஆபாச கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது த்ரிஷா காவல்துறையில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments