FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

44 வயதில் வாழ்வு தொடங்கும்.. ஓப்ரா அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்ட த்ரிஷா

44 வயதில் வாழ்வு தொடங்கும் என ஓப்ரா அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா

Updated On : 27 ஜூலை 2026, 3:22 pm IST
நடிகை த்ரிஷா - insta
பகிர்:

ஊடகங்களில் சமூக, பெண்ணிய வாதங்களை வெளியிட்டு பிரபலமடைந்து வரும் ஓப்ரா வின்ஃபிரேவின், 44 வயதில் வாழ்வு தொடங்குகிறது என்ற அறிவுரைக்கு ஆனெமென் என பதிவிட்டு ஷேர் செய்திருக்கிறார் நடிகை த்ரிஷா.

நடிகை த்ரிஷா, கடந்த மே 4ஆம் தேதி தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்த நிலையில், இந்த பதிவை ஷேர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்ரா வின்ஃப்ரேவின் வயது, தன்னை அறிதல், மன வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். கிகி பால்மரின் பாட்காஸ்ட் ஒன்றில், கிகி பால்மர், நீங்கள் உங்கள் வாழ்வின் எந்தக் காலக்கட்டத்தை மீண்டும் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து உங்களது 30வது வயதிலா என்று தொடர்ந்து கேள்வி கேட்க, இல்லை, நான் எனது 30வது வயதில் வாழ விரும்பவில்லை. நான் என்னுடைய 44வது வயதை எடுத்துக் கொள்கிறேன். உண்மையில் வாழ்வு 44வது வயதில்தான் தொடங்குகிறது என்று நான் கருதுகிறேன் என பதிலளித்தார்.

மேலும், ஏன் அவ்வாறு கூறுகிறார் என்பது குறித்தும் விளக்கம் கொடுத்தார்,

"அதாவது, மற்றவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிப்பதை விட்டுவிட்டு, நீங்கள் உங்களை முழுமையாக உணரும் ஒரு நிலையை அடைகிறீர்கள். என்னிடம் ஆலோசனை பெற்ற இளம் பெண்கள் சிலர் 30-களின் ஆரம்பத்திலேயே இந்த நிலையை எட்டியுள்ளனர்; ஆனால் என்னைப் பொறுத்தவரை, 44 வயதில்தான் நான் அந்தத் தெளிவைப் பெற்றேன். எனக்கான அந்த வளர்ச்சியை என்னால் உணர முடிந்தது. நான் இதை மற்றவர்களுக்காக மட்டும் செய்யவில்லை; வெறும் வெளித்தோற்றத்திற்காகவோ அல்லது மற்றவர்களைக் கவருவதற்காகவோ நான் எதையும் செய்வதில்லை. உண்மையில், நான் முழு உற்சாகத்தோடு, தெளிவான நோக்கத்தோடு, எனக்காகவே வாழும் ஒரு நிலையில் இருந்தேன் என்று மிகத் தெளிவாக விளக்கியிருந்தார்.

இந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ஆமென் என ஒற்றை வார்த்தையை பதிவிட்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

summary

Life begins at 44 Trisha agrees with Oprah advice

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments