சூர்யா - 44 அப்டேட்!
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கியுள்ளது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பக்டீ இப்படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அந்தமானில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவுக்கான 2 பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் சில சண்டைக்காட்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறும் என்றும் தகவல்.