விளையாடு மங்காத்தா..! அஜித்துடன் வெங்கட் பிரபு!
நடிகர் அஜித் குமார் இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
தற்போது, அப்படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜானில் உள்ளனர். அதேநேரம், நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அஜர்பைஜானில் நடிகர் அஜித் குமாரைச் சந்தித்துள்ளார். திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் 50-வது படமான மங்காத்தா திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி பெரிய வெற்றிப்படமாக்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.