நிவேதா தாமஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோ!
நடிகை நிவேதா தாமஸின் புதிய படத்தின் கதாபாத்திர அறிமுகம் 35 நொடிகள் வெளியாகியுள்ளது.
நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.
Advertisement
Advertisement
சமீபத்தில் தனது புதிய படத்தின் டீசரை வெளியிட்டார். ’35 சின்ன விஷயம் இல்ல’ என்ற இப்படத்தினை சுரேஷ் புரடக்ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார்.
நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிடவிருக்கிறார். கௌதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், நிவேதா தாமஸின் 35 நொடிகள் கதாபாத்திர அறிமுகம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.