இளையராஜா எழுதி இசையமைத்த ஜமா படத்தின் முதல் பாடல்!
இசையமைப்பாளர் இளையராஜா எழுதி இசையமைத்த ஜமா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்ஷன் நிறுவனம் ஜமா படத்தை தயாரித்துள்ளது. இதில், பாரி இளவழகன் நாயகனாகவும் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இதன் டீசரை வெளியாகி கவனம் ஈர்த்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல்பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இளையராஜா எழுதி இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, ஜஸ்டின் பிரபாகன் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.