முகப்பு
செய்திகள்

தங்கலான் படத்துக்காக எருமை சவாரி செய்த மாளவிகா மோகனன்!

தங்கலான் படத்துக்காக நடிகை மாளவிகா மோகனன் எருமை சவாரி செய்ததாகக் கூறியுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2024, 3:39 pm IST
நடிகை மாளவிகா மோகனன்
பகிர்:

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார்.

தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

Advertisement

Advertisement

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆக

இந்த நிலையில், தங்கலான் படக்குழு புரோமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நடிகை மாளவிகா மோகனன் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

மேக்கப் போடுவதற்கு 5 மணி நேரமாகும். அதனால் எனது தோலில் தடிப்புகள் உண்டாகின. பெரும்பாலும் வெயிலில் படப்பிடிப்பு நடைபெற்றன. அதனால் தோல், கண் மருத்துவர் உள்பட 5 மருத்துவர்களைச் சந்தித்தேன்.

எருமை மீது சவாரி செய்யவும் பழகிக்கொண்டேன். முதலில் இயக்குநர் என்னிடம் கூறும்போது நகைச்சுவை என்றிருந்தேன். முன்னதாகவே அவர் எனக்கு கூறாததால் நான் படப்பிடிப்பில் அதை செய்யமுடியவில்லை. பின்னர் அவர் மீண்டும் கேட்கவே அதை செய்தேன்.

தங்கலானில் பழங்குடியின தெய்வமாக நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments