FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காதல் தோல்வி... வீட்டிலேயே பார் வசதி... யாஷிகா ஆனந்த் பகிர்ந்த தகவல்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் தன்னைக் குறித்து பேசியுள்ளார்...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:19 pm IST
யாஷிகா ஆனந்த்
பகிர்:

நடிகை யாஷிகா ஆனந்த் காதல் தோல்வியில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, நோட்டா, சோம்பி ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்து மீண்டவர்.

தொடர்ந்து, திரைப்படங்களிலும் தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், பேட்டியில் பேசிய யாஷிகா, “நான் கடந்த 5 ஆண்டுகளாக எந்த பார்ட்டிகளிலும் கலந்துகொள்வதில்லை. வீட்டிலேயே பார் மற்றும் ஒளியிசை அமைப்பு உள்ளதால் நண்பர்கள் வருவார்கள். ஆனால், நான் குடிப்பதில்லை. என்னுடைய கடைசி காதல் தோல்வியடைந்தது. அதனால், எந்த புதிய உறவுகளையும் தேடவில்லை. என்னை நானே காதலித்து வருகிறேன்.

Advertisement

Advertisement

யாஷிகா ஆனந்த் - Instagram | Yashika Aannand

சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தவர்கள் என்பதால் அவர்கள் கதை சொன்னபோதெல்லாம் ஒப்புக்கொண்டேன். அப்போது முக்கியமான கதாபாத்திரமாக எனக்கு சொல்லப்பட்டிருக்கும். ஆனால், படப்பிடிப்புக்குப் போனால்தான் தெரியும் அது வேறு கதாபாத்திரம் என. ஒப்புக்கொண்டதற்காக நடித்துவிட்டு வருவேன். அதிலிருந்து நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Yashika Aannand has stated that she is experiencing heartbreak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments