'கோட்' தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விஜய் தற்போது நடிக்கும் புதிய திரைப்படம் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times). இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
மேலும், இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், விஜய் பாடியுள்ள 2 ஆவது பாடல் நாளை(ஜூன் 22) வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.