வைரலாகும் 'கல்கி 2898 ஏடி' 2ஆவது டிரைலர்!
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898ஏடி'.
பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' திரைக்கு வரவிருக்கிறது.
Advertisement
Advertisement
ஏற்கனவே இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் நேற்றிரவு 2ஆவது டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யூடியூப்பிலும் சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்கில் இருக்கிறது.
வெளியான 10 மணி நேரத்தில் தெலுங்கில் 62 லட்சம், ஹிந்தியில் 50 லட்சம், தமிழில் 3.9 லட்சம், மலையாளத்தில் 91ஆயிரம் , கன்னடத்தில் 42 ஆயிரம் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.