முகப்பு
செய்திகள்

பிரபு தேவாவின் பேட்ட ராப் டீசர்!

Updated On : 22 ஜூன் 2024, 3:26 pm IST
பகிர்:

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநராக இருந்து நடிகராக, இயக்குநராக பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

அதேநேரம், நாயகனாக பேட்ட ராப் மற்றும் மூன் வாக் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இதில், பேட்ட ராப் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதால் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எஸ்ஜே சினு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.