செய்திகள்

வயதாக வயதாக அழகில் மெருகேறும் நயன்: விக்னேஷ் சிவன் பெருமிதம்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது. 

தொடர்ந்து, அன்னபூரணி திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நயன்தாரா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2002-ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.

அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள். 

மகளிர் தினத்தினை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இண்ஸ்டாகிராமில் நடிகை நயன் தாரா, ஒயின் புகைப்படங்களைப் பதிவிட்டு, “வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விசயம். மகளிர் தின வாழ்த்துகள் என்னுடைய விருப்பமான அழகிய தங்கப் பெண்ணே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT