FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

யு/ஏ சான்றிதழுடன் வெளியான நயன்தாராவின் திருமண விடியோ டிரைலர்..!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோவின் டிரைலரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

Updated On : 9 நவம்பர் 2024, 3:58 pm IST
நயன்தாரா - படங்கள்: இன்ஸ்டா / நெட்பிளிக்ஸ் இந்தியா.
பகிர்:

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து  திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால், இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை, பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் உருவாக்கியுள்ளார்கள்.

அந்த விடியோவின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற நவம்பர் 18 ஆம் தேதி முழுமையனா படம் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

யு/ஏ சான்றிதழுடன் இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. 13 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்கக் கூடாதென நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிறுத்தியுள்ளது.

1 மணிநேரம் 21 நிமிடங்கள் கொண்ட ஆவண விடியோவாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments