முகப்பு
செய்திகள்

ஹிப் ஹாப் ஆதியை புகழ்ந்த தமன்னா!

ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கி நடித்த கடைசி உலகப் போரின் ஹிந்தி டிரைலரை தமன்னா வெளியிட்டார்.

Updated On : 1 அக்டோபர் 2024, 9:30 pm IST
ஹிப் ஹாப் ஆதி, தமன்னா
பகிர்:

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.

சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டது. இதன் முதல் பார்வை போஸ்டர் முதல் கிளிம்ஸ் விடியோவரை அனைத்தும் கவனம் ஈர்த்தது.

Advertisement

இந்தப் படம் செப். 20 ஆம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகம் வருமென சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி உறுதிசெய்தார்.

இந்நிலையில் ஹிந்தியிலும் டப் செய்து வரும் அக்.4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ஹிந்தி டிரைலரை நடிகை தமன்னா வெளியிட்டு வாழ்த்தினார்.

தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

கடைசி உலகப் போர் ஹிந்தியில் அக்.4ஆம் தேதி வெளியாவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. ஆதியின் கனவுக்கு உயிர்கொடுப்பதில் அவர் பக்கம் நிற்பதில் பெருமை கொள்கிறேன். மகாராஜாவில் சிறப்பாக நடித்த நட்டி நடராஜ் போர் குறித்த பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தினை கூறியுள்ளார். இந்த உலகத்தில் அமைதியே எல்லவற்றையும்விட மிகவும் முக்கியமானது.

படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்றார்.

நடிகை தமன்னா தற்போது2 ஹிந்திப் படங்கள்,ஒடேலா 2 என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார்.

ஒடேலா முதல் பாகம் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய த்ரில்லர் படம் ஆஹா ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அசோக் தேஜா இயக்குகிறார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு வெளியான தமன்னாவின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.