ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்!
ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான, முன்பணிகளில் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார்.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படமென்பதால் குறிப்பிடத்தகுந்த பட்ஜெட்டில் இப்படம் தயாரிப்படும் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சந்தீப் கிஷன் மாநகரம், மைக்கெல், ராயன் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். இவர், விஜய் மகன் படத்தில் நடிக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.