மிஷன் டிரைலர் தேதி அறிவிப்பு!
நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சேப்டர்-1 படத்தின் டிரைலர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார். தற்போது, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாகவும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: தெலுங்கு நடிகர்கள் எனக்கு வாய்ப்பு வழங்குவதில்லை: புலம்பும் இசையமைப்பாளர் மணி சர்மா!
Advertisement
Advertisement
அருண் விஜய் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பதால் ஜன.12 ஆம் தேதி வெளியாகவுள்ள மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஜன.5) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.