விருதுகள் தேடி வரும்: எதிர்நீச்சல் மதுமிதாவை வாழ்த்திய சின்ன திரை நடிகை!
மக்களைக் கவர்ந்த சிறந்த ஜோடியாக அய்யனார் துணை தொடரில் இருந்து நடிகை மதுமிதாவும், நடிகர் அரவிந்தும் தேர்வாகி விருது வென்றுள்ளனர்.
விருதுகள் தேடி வரும் என நடிகை மதுமிதாவுக்கு வைஷ்ணவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்ன திரையில் மக்களைக் கவர்ந்த சிறந்த ஜோடியாக அய்யனார் துணை தொடரில் இருந்து நடிகை மதுமிதாவும், நடிகர் அரவிந்தும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
அவர்களுக்கு சின்ன திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.15 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகியாக எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நடித்த மதுமிதாவும், நாயகனாக நடிகர் அரவிந்தும் நடித்து வருகின்றனர்.
அதோடுமட்டுமின்றி, அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது. இதனை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது.
உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு நெருக்கமான காட்சிகளைக் கொண்டு ஒளிபரப்பாவதால், குறுகிய காலத்திலேயே அதிக மக்களிடம் அய்யனார் துணை தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்தொடரில் நடித்துவரும் மதுமிதா - அரவிந்த் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. எதார்த்தமாக நிஜ வாழ்க்கை கணவன் - மனைவியைப் போன்று நடிப்பதால், இவர்கள் நடிப்புக்கு சின்ன திரைக்கான சிறந்த ஜோடி விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்டு நடிகை மதுமிதாவுக்கு அவரின் தோழியும் சக நடிகையுமான வைஷ்ணவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''விருதுகள் அவள் செல்லும் வழிதேடி வருகின்றன. நீ எங்கு சென்றாலும் அன்புடன் வழிநடத்தி பலரையும் வென்றுவிடுகிறாய். மகுடத்தை அவள் தேர்வு செய்யவில்லை. மகுடம்தான் அவளைத் தேர்வு செய்துள்ளது. நான் வெற்றி பெறுகிறேனோ இல்லையோ, உன்னுடைய வெற்றியை அருகில் இருந்து போற்றுவேன். என் உடன் பிறவா சகோதரியே, உன்னால் பெருமையடைகிறேன். உங்களுக்கும் எனக்கு கிடைத்ததைப் போன்று தோழி கிடைத்துள்ளாரா? அவரை பாதுகாத்து போற்றுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!
Ayyanar thunai Serial Actress Madhumitha won award wishes from vaishnavi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.