நடிகை ராணி, அவரது மகள் தர்ணிகா.  படங்கள்: இன்ஸ்டா / தர்ணிகா.
செய்திகள்

கதாநாயகியான நாட்டாமை டீச்சரின் மகள்!

நாட்டாமை டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் தற்போது நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்ப்பெற்றவர் நடிகை ராணி என்கிற ரக்‌ஷா. இவர் ஜெமினி படத்தில் ஓ போடு பாடலிலும் மிகவும் கவனம் ஈர்த்தார்.

இவரது மகள் தர்ணிகா தற்போது நாயகியாக தமிழ் சினிமாவில் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

கொம்புசீவி பட போஸ்டர்.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புவீசி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கேங்ஸ்டர் கதையாக உருவான கொம்புவீசியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வருகிற டிச. 19 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது: மு. வீரபாண்டியன்

பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வாரம்

சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொருளாதார வளா்ச்சி, மனிதகுல எதிா்காலத்துக்கான முக்கிய இயந்திரம் அறிவியல்! நோபல் விஞ்ஞானி மவுங்கி பவெண்டி

எழுத்தாளா் அண்டனூா் சுராவின் உப்புலிக்குடி நாவலுக்கு பரிசு

SCROLL FOR NEXT