செய்திகள்

ஹைதராபாத்தில் லோகேஷ் கனகராஜ்! யாருக்கு கதை சொல்கிறார்?

லோகேஷ் கனகராஜின் புதிய திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் புதிய திரைப்படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அதற்கான பணிகளே இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷுடன் இணைவார் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு, அல்லு அர்ஜுனைச் சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், அல்லு அர்ஜுன் இயக்குநர் திரி விக்ரமுடன் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த திரைப்படம் முதலில் துவங்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படலாம்.

director lokesh kanagaraj in hyderabad for story discussion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடி உதிர்தல் பிரச்னையா? காரணம் என்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.89.79-ஆக நிறைவு!

ஒரே நாளில் 3000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்! ஈரான், பாக். அரசுகள் நடவடிக்கை!

ஒவ்வொரு வாக்கும் நமக்கு பொக்கிஷம்: விஜய்

பசியினால் பிச்சை எடுத்தவர்... இன்று பிரேசிலின் நாயகன்! உழைப்பால் உயர்ந்த ரஃபீனியா!

SCROLL FOR NEXT