ஜன நாயகன்! விஜய் எனக்கு சகோதரர்: இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சி
நடிகர் விஜய் தனக்கு சகோதரர் போன்றவர் என்று ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நெகிழ்ச்சி
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனக்கு சகோதரர் போன்றவர் என்று இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெல்சன் பேசுகையில் "பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், ஒவ்வொரு நாளும் விஜய் என்னை அழைத்தார். என் மீது கோபமாக இருக்கிறாரா என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு, உங்களுடனான எனது நட்பை ஒரு படம்தான் தீர்மானிக்கிறதா? என்று விஜய் கேட்டார்.
Advertisement
Advertisement
அவருடன் எனக்கு தனிப்பட்ட பிணைப்பும் அன்பும் இருக்கிறது. விஜய் எனக்கு சகோதரர் போன்றவர்" என்று தெரிவித்தார்.
ஜன நாயகன், விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகரும் ஒரு பாடல் பாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Director Nelson Dilipkumar spoke about his friendship with Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.