FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விரைவில் ஜன நாயகன் புதிய டிரைலர்!

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு டிரைலர் குறித்து...

Updated On : 13 ஜூலை 2026, 2:49 pm IST
ஜன நாயகன் படக் காட்சி. - படம்: யூடியூப் / டி சீரிஸ்.
பகிர்:

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டு டிரைலர் தயாராகி வருகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜன நாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான பகவதி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை ஜூலை 24 ஆம் தேதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்து வருகின்றன.

Advertisement

Advertisement

முக்கியமாக தணிக்கைச் சான்றிதழ் போஸ்டரில் மாண்புமிகு தமிழக முதல்வர் சி. ஜோசஃப் விஜய் என்றே எழுதப்பட்டுள்ளது. இதனால், திரையில் தளபதி விஜய்க்குப் பதிலாக, ‘மாண்புமிகு முதல்வர்’ என்றே பெயர் இருக்கும்.

இந்த நிலையில், ஜன நாயகன் வெளியீட்டு டிரைலர் தயாராகி வருவதாகவும் விரைவில் அது வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் டிரைலரில் இல்லாத காட்சிகள் இதில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.

The trailer for Vijay's film Jananayagan is currently being prepared.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments