FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜன நாயகன் - கேரளத்தில் அதிகாலைக் காட்சி இல்லை!

ஜன நாயகன் அதிகாலைக் காட்சி குறித்து...

Updated On : 29 டிசம்பர் 2025, 12:23 pm IST
நடிகர் விஜய்
பகிர்:

கேரளத்தில் ஜன நாயகன் திரைப்படத்திற்கான அதிகாலைக் காட்சிகள் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்வில், விஜய் பேசிய பேச்சு ரசிகர்களிடம் உருக்கத்தை ஏற்படுத்தியுடன் விழா நிகழ்வுகள் பலருக்கும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

பெங்களூருவில் இப்படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளன.

இந்த நிலையில், எப்போதும் கேரளத்தில் முதல்காட்சி அதிகாலை 4 மணிக்குத் துவங்கும். ஆனால், இம்முறை தயாரிப்பு தரப்பிலிருந்து அதற்கு ஒப்புதல் அளிக்காததால் முதல் நாளின் முதல் காட்சி காலை 6 மணிக்கே துவங்கும் என இப்படத்தின் கேளர விநியோகிஸ்தர் அறிவித்துள்ளார்.

கேரளம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரத்திலும் முதல் காட்சி காலை 6 மணிக்கே ஆரம்பமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments