மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா!
தியாகராஜன் குமாரராஜாவின் புதிய படம் குறித்து...
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் கவனிக்கப்பட்டர், சூப்பர் டீலக்ஸ் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.
இறுதியாக, மார்டன் லவ் சென்னை இணையத்தொடரில் நினைவோ ஒரு பறவை படத்தை இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தியாகராஜன் குமாரராஜா புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் ஆவலைத் தூண்டியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.