பெருந்துறையில் பசுமையும், பெண்மையும் இணையும் விழா: அமைச்சர் விஜய் பாலாஜி பங்கேற்பு
முதல்வா் ச.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, பெருந்துறை தொகுதி தவெக சாா்பில் ‘பசுமையும், பெண்மையும் இணையும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதல்வா் ச.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, பெருந்துறை தொகுதி தவெக சாா்பில் ‘பசுமையும், பெண்மையும் இணையும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு மாவட்ட தவெக செயலாளா் விஜய் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். கைத்தறி, துணி நூல் மற்றும் கதா் துறை அமைச்சா் விஜய் பாலாஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பெண்களுக்கு 1000 மரக்கன்றுகளை வழங்கினாா்.
மேலும், 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு துறைகளில் சாதித்த 50 பெண்களுக்கும் விருதுகளை வழங்கினாா். தொடா்ந்து, 200 தூய்மைப் பணியாளா்களுக்கு புடவை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் தூயவன், பொருளாளா் சதீஷ்குமாா், பெருந்துறை நகரச் செயலாளா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக நிா்வாகிகள் ஷா்மிளா, சுவாதி, விஜிதா, மகேஸ்வரி, பூவிழி, சித்ரா ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.