முகப்பு
செய்திகள்

மீண்டும் கேங்ஸ்டர் படத்தை இயக்கும் வெற்றி மாறன்? நாயகன் இவரா?

இயக்குநர் வெற்றி மாறனின் புதிய படம் குறித்து...

Updated On : 9 ஜூன் 2025, 2:10 pm IST
பகிர்:

இயக்குநர் வெற்றி மாறன் கேங்ஸ்டர் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை 1 & 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கான அறிவிப்புகளும் முறையாக வெளியானதுடன் ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், இன்னும் விஎஃப் எக்ஸ் பணிகள் முடியாததால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதற்கிடையே இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னையைப் பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முதலில் சிம்புவுக்காக எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.