நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அபிநயா!
அபிநயா திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்...
நடிகை அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிநயா, ஈசன் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மலையாளத்தில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ’பனி’ நல்ல வரவேற்பை பெற்றது.
Advertisement
Advertisement
இப்படத்தைத் தொடர்ந்து, தன் நீண்டகால நண்பரைக் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அபிநயா கூறியிருந்தார்.
இதையும் படிக்க: சவுண்டை ஏத்து மாமே! அனிருத் குரலில் குட் பேட் அக்லி புதிய பாடல்!
இந்த நிலையில், வெகசனா கார்த்திக் என்பவருடன் தன் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்று முடிந்ததாகக் கூறி அபிநயா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.