பிரபல ஒளிப்பதிவாளரை மணந்த நடிகை அஹானா கிருஷ்ணா!
நடிகை அஹானா கிருஷ்ணா ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியை திருமணம் செய்துள்ளார்.
நடிகை அஹானா கிருஷ்ணா ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியை திருமணம் செய்துள்ளார்.
மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா, ராஜீவ் ரவியின் ’நான் ஸ்டீவ் லோபஸ்’ திரைப்படத்தில் அறிமுகமானார். துணை நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளான இவர் லூகா, பதினெட்டாம் படி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அஹானாவுக்கும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவிக்கும் இரு நாள்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாக சமூக ஊடகங்களில் இன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
நிமிஷ் ரவி குரூப், கிங் ஆஃப் கோதா, ரோர்ஸாச், லக்கி பாஸ்கர், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
நீண்டகால நண்பர்களாக இருந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துள்ளனர். இதுபற்றி அஹானா கிருஷ்ணா வெளியிட்ட பதிவில், “உன்னை 20 வயதில் சந்தித்தேன், 30 வயதில் திருமணம் செய்துகொண்டேன்.என் சிறந்த நண்பர், காதலன், துணைவர், இப்போது கணவர். உன்னுடன் இருக்கையில், என் இதயம் எப்போதும் மெதுவாக, சீராக, மிகச் சரியாகத் துடிக்கிறது. ஒன்றாக வயது முதிர்ந்து, நமக்கான உலகத்தை உருவாக்குவோம். வாழ்நாள் முழுவதும், அதன் பின்னரும் இணைந்தே இருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Actress Ahaana Krishna has married cinematographer Nimish Ravi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.