பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்... படங்கள்: இன்ஸ்டா ஸ்டோரி / துஷாரா விஜயன்.
செய்திகள்

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்: எந்தப் படத்திற்காக?

நடிகை துஷாரா விஜயன் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

DIN

நடிகை துஷாரா விஜயன் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிற விடியோக்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் மிகப்பெரிய புகழினைப் பெற்றார்.

இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன் படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

ராயன், வீர தீர சூரன் படங்களில் துஷாரா விஜயனின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பாராட்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உடல்நலத்திலும் உடற்பயிற்சியில் அக்கறைக் கொண்ட துஷாரா விஜயன் சமீப காலமாக பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்...

அடுத்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாததால் இந்தப் பயிற்சிகள் எந்தப் படத்துக்காக என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்...

புதிய ஆக்‌ஷன் படமா அல்லது சார்பட்டா பரம்பரை 2 படத்திற்காகவா என துஷாரா விஜயனின் இந்தப் பயிற்சிகள் பல யூகங்களை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

12 எம்சிடி வாா்டுகளுக்கு நவ.30-இல் இடைத் தோ்தல்

தில்லியில் மேலும் 621 பள்ளிகளில் தனியாா் துப்புரவு சேவை

SCROLL FOR NEXT