FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருமண நிகழ்வில் பற்கேற்ற பிரபல காமெடி நடிகர் திடீர் பலி

உடுப்பியில் திருமண விழாவில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகர் திடீரென சரிந்து விழுந்து பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 மே 2025, 12:12 pm IST
ராகேஷ் பூஜாரி
பகிர்:

உடுப்பியில் திருமண விழாவில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகர் திடீரென சரிந்து விழுந்து பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில் பிரபல காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி(33). இவர் உடுப்பியில் நேற்று நடந்த திருமண மெஹந்தி விழா ஒன்றில் பங்கேற்றார். விழாவில் நண்பர்களுடன் அவர் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சை பிடித்து கீழே சரிந்து விழுந்தார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ராகேஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ராகேஷுக்கு இரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

அவரது மறைவு கன்னட திரையுலக மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமெடி கிலாடி நிகழ்ச்சியின் வெற்றியாளரான ராகேஷ் பூஜாரி காந்தாரா படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். மேலும் காந்தாரா-2விலும் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments