தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!
அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தீயவர் குலைநடுங்க...
தீயவர் குலை நடுங்க திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தீயவர் குலை நடுங்க.
இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படம் நவ. 21 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: அரசன் தரமாக இருக்கும்: கவின்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.