FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் ஸ்ரீநிதி ஷெட்டி - ராஷி கன்னாவின் புதிய படம்!

தெலுசு கதா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Updated On : 12 நவம்பர் 2025, 2:25 pm IST
பகிர்:

ஸ்ரீநிதி ஷெட்டி - ராஷி கன்னா நடிப்பில் வெளியான தெலுசு கதா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரஜா கோனா இயக்கத்தில் சித்து ஜொன்னலட்டா, ஸ்ரீநிதி ஷெட்டி - ராஷி கன்னா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தெலுசு கதா.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலைவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி வாடகைத் தாய் பாத்திரத்தில் நடித்துள்ளார். செயற்கை கருத்தரித்தல், வாடகைத் தாய் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலுசு கதா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவ. 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

summary

OTT release of the movie Telugu Katha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments