இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் கலக்கலான படங்கள்!
இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக..
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
மிராஜ்
ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் திரைப்படம் அக்.19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஏற்கெனவே, பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ள ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளிக்கு இது ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில், ஷில்பா மஞ்சுநாத் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(அக். 17) வெளியாகிறது.
மேலும் இந்தப் படத்தில் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டியர் ஜீவா
நடிகர் டிஎஸ்கே நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் டியர் ஜீவா. இப்படத்தை பிரகாஷ் வி. பாஸ்கர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் அக். 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மட்டகுதிரை
மட்ட குதிரையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமான ’Tales of Tradition மட்டகுதிரை’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஆப்யந்தர குட்டவாலி
ஆசிப் அலி நடிப்பில் வெளியான மலையாள மொழிப் படமான 'ஆப்யந்தர குட்டவாலி', நாளை(அக். 17) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தணல்
அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான 'தணல்' திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வல்சலா கிளப்
நண்பர்களுடன் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மலையாள மொழிப்படம் வல்சலா கிளப். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 19 ஆம் தேதி வெளியாகிறது.
கிஷ்கிந்தாபுரி
பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த படம் "கிஷ்கிந்தாபுரி". இப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
கடந்த வார ஓடிடி
கடந்த வாரம் வெளியான ராம்போ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், பாம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில், வார் - 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கின்றன.
இதையும் படிக்க: விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம்!
You can see which movies are releasing this week on OTT platforms.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.