கவினின் மாஸ்க் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
கவினின் மாஸ்க் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி...
கவினின் மாஸ்க் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவின் நடிப்பில் இறுதியாக கிஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் வழங்கும் மாஸ்க் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியுள்ளார். நாயகியாக ருஹானி ஷர்மாவும் பிரதான கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான கண்ணுமுழி பாடல், இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், மாஸ்க் திரைப்படம் உலகம் முழுவது நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: லோகா ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
The release date of Kavin's Mask has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.