FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இயக்குநர் பாரதிராஜாவின் நிலைமை என்ன?

இயக்குநர் பாரதிராஜா உடல் நலம் குறித்து....

Updated On : 2 ஏப்ரல் 2026, 4:36 pm IST
இயக்குநர் பாரதிராஜா - bharathiraja
பகிர்:

இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா சில நாள்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. அப்போதே, பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று நலனை விசாரித்தனர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் அவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இந்த நிலையில், ஓரிரு நாள்களுக்கு முன் மருத்துவமனையிலிருக்கும் பாரதிராஜாவின் உடலும் முகமும் நலிவுற்ற புகைப்படம் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலரும் வருந்தினர்.

தற்போது, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குநர் பாரதிராஜா கடும் போராட்டத்திற்குப் பின் குணமடைந்துள்ளார். எப்போதும் தன்னம்பிக்கைதான் வெல்லும். ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீங்கள் 100 ஆண்டுகள் வரை வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனக் கூறியுள்ளார். இப்பதிவால், பாரதிராஜா நலமடைந்த செய்த ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

director bharathiraja recover from breathing issues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments