காசி சாமியார்களில் பலர் கொலைக் குற்றவாளிகள்: ஆர்யா
நடிகர் ஆர்யா காசியிலுள்ள சாமியார்கள் குறித்து பேசியுள்ளார்...
நடிகர் ஆர்யா காசியில் சாமியார்களாக உள்ள பலர் குற்றவாளிகள் எனக் கூறியுள்ளார்.
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் ஏப். 17 வெளியீடாகத் திரைக்கு வருகிறது. நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழுவினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதற்கான நேர்காணலில் பேசிய நடிகர் ஆர்யா, “நான் கடவுள் திரைப்படத்திற்காக காசியில் இருந்தபோது அங்குள்ள சாமியார்களுடன் பழக நேர்ந்தது. அப்போதுதான் தெரிந்தது, அங்கு சாமியாராக இருப்பவர்களில் 40 சதவீதம் பேர் கொலைக் குற்றங்களைச் செய்து தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். படப்பிடிப்பின் போது காவலர்கள், எங்களிடமே சாதாரண துப்பாக்கிதான் இருக்கிறது. உள்ளே சில சாமியார்கள் ஏகே - 47 வைத்திருப்பார்கள் கவனமாக இருங்கள் என்றனர்.” எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இது இந்தியளவில் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஆர்யா இஸ்லாமியர் என்பதால் இப்படிச் சொல்கிறார் என்றும் இன்னும் சிலர் ஆர்யா சொல்வது உண்மைதான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
Actor Arya has stated that many of those posing as godmen in Kasi are criminals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.