கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!
நடிகர் பிருத்விராஜ் குறித்து கர படத்தின் இயக்குநர் பேசியிருப்பதாவது...
கர படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், “இந்தப் படத்தின் கதையை நடிகர் பிருத்விராஜ் நிராகரித்தார்” எனக் கூறியுள்ளார். பின்னர் கதையை மாற்றியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வனை வைத்து போர்த் தொழில் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநர் விக்னேஷ் ராஜா தமிழ் சினிமாவில் உடனடி கவனம் பெற்றார்.
தற்போது, நடிகர் தனுஷை வைத்து கர எனும் படத்தினை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் வரும் ஏப். 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷனில் இயக்குநர் பிஸியாக இருக்கிறார். நேர்காணல் ஒன்றில் இந்தப் படம் குறித்து அவர் பேசியிருப்பதாவது:
போர்த் தொழில் படத்தினைப் பார்த்த நடிகர் பிருத்விராஜ் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார். கர படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் முதல் தேர்வாக பிருத்விராஜ் சார்தான் இருந்தார். அவரிடம் இந்தக் கதையைக் கூறியபோது, அந்தக் கதாபாத்திரம் மிகவும் இரட்டைத் தன்மைக் கொண்டதால் தனக்கு பிடிக்குவில்லை என்றார். இருந்தாலும் படம் ஹிட் அடிக்கும் என்றும் வாழ்த்தினார்.
நான் இன்னும் சிலரிடம் இந்தக் கதையைச் சொல்லும்போது மற்றவர்களும் இதையேக் கூறினார்கள். பிறகு, அந்தக் கதாபாத்திரத்தில் மீண்டும் மாற்றம் செய்தேன். பிறகுதான் சுராஜ் சார் படத்தில் இணைந்தார் என்றார்.
பிருத்விராஜ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் வெளியான பள்ளிச்சட்டம்பி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
Prithviraj reject Vignesh Raja Kara film script initially and Director Makes Changes!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.