திரையில் மீண்டும் விஜய் - த்ரிஷா! திருப்பாச்சி படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
திருப்பாச்சி படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
முதல்வர் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படம், கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
திருப்பாச்சியிலிருந்து சென்னைக்குத் திருமணமாகிச் சென்ற தன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் ரௌடிகளால் பிரச்னை ஏற்பட, அதை தீர்க்கச் செல்லும் அண்ணனாக விஜய் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
மேலும், இந்தப் படத்தில் பசுபதி, மல்லிகா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்திருந்தனர்.
திருப்பாச்சி படத்தில் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. இப்படம் வெளியான போது, தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு (Re-Release) செய்யப்படுகிறது.
திருப்பாச்சி படத்தினை, திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளனர்.
The re-release date for the film Thirupaachi, starring Vijay and Trisha, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.