ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்குர்!
கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை காதலிப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாக்குர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை காதலிப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாக்குர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்குரும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய காணொலி வைரலானது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை, மேற்கு பாந்த்ராவில் உள்ள பிரபல ’கஃபே ஷாப்’பில் மிருணாள் தாக்குரும், ஜெய்ஸ்வாலும் இருப்பது போன்ற காணொலி சில நாள்களுக்கு முன் வெளியானது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, 33 வயதான மிருணாள் தாக்குர், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான 24 வயது ஜெய்ஸ்வாலை காதலிப்பதாக வதந்தி பரவியது.
இதுபற்றி இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் இருவரும் காதலிப்பதாகப் பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் கமெண்ட் செய்த மிருணாள் தாக்குர் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பதிலளித்திருந்தார்.
அந்தப் பதிலில், “கொஞ்சம் நிதானமாக இருங்கள். நாங்கள் இருவரும் எங்கே ஒன்றாக இருந்தோம்? நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் தானே? அப்படியிருந்தும் இதுபோன்ற வதந்திகளை எப்படி நம்புகிறீர்கள்?
நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் ஜென் ஸீ தலைமுறையினரிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். அதிகமானப் பார்வைகளைப் பெற வேண்டுமென்றால் உண்மையான பிரச்சினைகள் குறித்த வீடியோக்களை உருவாக்கிப் பதிவிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Actress Mrunal Thakur has put an end to the rumors circulating about her dating cricketer Yashasvi Jaiswal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.