FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கிராம மக்களுடன் சுதந்திர நாளைக் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் சுதந்திர நாளைக் கொண்டாடியுள்ளார்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:41 pm IST
கிராம மக்களுடன் சுதந்திர நாளைக் கொண்டாடிய சிவகார்த்திகேயன்
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் சுதந்திர நாளைக் கொண்டாடியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றது.

Advertisement

Advertisement

மதுரையை பின்னணியாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

மதுரையில் இதற்காக பெரியளவில் செட் அமைக்கபட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை அருகே உள்ள கிராமத்தில் மாணவர்கள் மற்றும் கிராம மக்களுடன் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மாணவர்களுடன் சிவகார்த்திகேயன்
summary

Sivakarthikeyan celebrated Independence Day with villagers!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments