FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கோடிகளை வசூலித்த சென்னை லவ் ஸ்டோரி ஓடிடி தேதி!

சென்னை லவ் ஸ்டோரி திரைப்படத்தின் ஓடிடி தேதி....

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:18 pm IST
பகிர்:

'சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சென்னை லவ் ஸ்டோரி. இதில், நாயகனாக கிரண் அப்பாவரமும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியாவும் நடித்துள்ளனர்.

தெலுங்கில் முழுநீளக் காதல் திரைப்படமாக கடந்த ஜூலை 24 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. இப்படம் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வருகிற ஆக. 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ’மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் வெற்றியைக் கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments