ரூ. 50 கோடி வசூலித்த சென்னை லவ் ஸ்டோரி!
சென்னை லவ் ஸ்டோரி திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது...
'சென்னை லவ் ஸ்டோரி’ என்ற திரைப்படம் நல்ல வணிக வெற்றியை நோக்கிச் சென்றுள்ளது.
மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சென்னை லவ் ஸ்டோரி. இதில், நாயகனாக கிரண் அப்பாவரமும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியாவும் நடித்துள்ளனர்.
தெலுங்கில் முழுநீளக் காதல் திரைப்படமாக கடந்த ஜூலை 24 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. அதிகரிக்கும் காட்சிகளால் இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழில் ’மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் வெற்றியைக் கொடுத்துள்ளார்.
The film 'Chennai Love Story' is heading towards significant commercial success.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.