நடிகர் கவின் படத்தில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷாலினி!
நடிகர் கவின் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஷாலினி நடிக்கவுள்ளது குறித்து...
நடிகர் கவின் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை ஷாலினி நடிக்கவுள்ளார்.
முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலர் ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தற்போது கதை நகர்கிறது.
இத்தொடரில் ராஜி என்ற பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ஷாலினி. திருமணத்துக்குப் பிறகு சின்ன திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும், தனது வசீகரமான தோற்றத்தாலும் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளார்.
நடனத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்ற ஷாலினி, சின்ன திரையில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார். நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் இவர், தற்போது கவின் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கவினின் 9வது படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஷாலினி நடிக்கவுள்ளார். சின்ன திரையில் தொடர்ந்து உழைத்துவந்த ஷாலினி, வெள்ளித்திரையில் நுழையவுள்ளதால் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த நடிகை காவ்யா அறிவுமணி, கவினின் ஹாய் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Vijay tv Pandian Stores Shalini to act in actor Kavin's new movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.