FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளியீட்டுத் தேதியையே படத்தின் பெயராக வைத்த இயக்குநர் அனில் ரவிபுடி!

நடிகர் வெங்கடேஷின் புதிய திரைப்படப் பெயர்...

26 வினாடிகள் முன்பு
பகிர்:

இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து கவனிக்கப்படுபவர் இயக்குநர் அனில் ரவிபுடி. ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி வெளியீடாகத் தன் திரைப்படத்தைக் கொண்டு வருவதால் அந்த பண்டிகையின் இயக்குநர் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இறுதியாக, இவர் இயக்கிய பகவந்த் கேசரி, சங்கராந்தி வஸ்துனம் (2025 -ஜனவரி வெளியீடு), மன ஷங்கர வர பிரசாத் காரு (2026 - ஜனவரி வெளியீடு) ஆகிய திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றன.

Advertisement

Advertisement

அதேபோல், இந்த முறை நடிகர்கள் வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுவும் சங்கராந்தி வெளியீடாகவே திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், சுவாரஸ்யமாக இப்படத்தின் வெளியீட்டுத் தேதியான ஜனவரி 12-யையே படத்தின் பெயராகவும் வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியான விடியோவில் இயக்குநர் அனிலிடம் நடிகர்கள் படத்திற்கு என்ன பெயர்? எனக் கேட்க, ‘ஜனவரி 12 விடுதல’ எனக் கூறுகிறார். இறுதியில், இதுதான் திரைப்படத்தின் பெயர் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்தாண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

The title of the new film directed by Anil Ravipudi has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments