வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...
தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வரும் ஆக.7ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் வருண் தேஜ் 2014ல் முகுந்த் எனும் படத்தில் நாயகனாக அறிமுகமானார். லோஃபர், ஃபிதா, எப்ஃ2 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
நடிகை லாவண்யா திரிபாதியை 2023ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை கடந்த 2025 செப்டம்பரில் பிறந்தது.
Advertisement
Advertisement
கடைசியாக வருண் தேஜ் நடிப்பில் வெளியான மட்கா திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரியன் கனகராஜு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மெர்லபாகா காந்தி இயக்கியுள்ளார். இதனை ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஸன் இணைந்து தயாரிக்கிறது.
இந்திய - கொரியன் பாணியிலான நகைச்சுவை கலந்து ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. தமன் இசையில் உருவாகிவரும் இந்தப் படம் உலகம் முழுவதும் வரும் ஆக.7ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Varun Tej-starrer 'Korean Kanakaraju' to release on August this day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.