FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியுள்ளார்.

7 வினாடிகள் முன்பு
வருண் சக்ரவர்த்தி
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 தொடர் நேற்று (செப்டம்பர் 13) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

Advertisement

Advertisement

கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது காயம் காரணமாக விலகிய, அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதும் சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வருண் சக்ரவர்த்திக்கு புதிதாக காயம் ஏற்பட்டுள்ளது ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகுகிறார். ஆசிய போட்டிகளில் அவர் விளையாடுவதும் சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஏற்கனவே விலகியுள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் வருண் சக்ரவர்த்தியும் இணைந்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த பிறகு, ஆசிய போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

Spinner Varun Chakravarthy has withdrawn from the T20 series against Afghanistan due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments