FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் ருக்மணி வசந்த்?

ரஜினிகாந்த் திரைப்படத்தில் ருக்மணி வசந்த்...

Updated On : 14 ஜூலை 2026, 4:57 pm IST
ருக்மணி வசந்த்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் தர்மன் திரைப்படத்தில் ருக்மணி வசந்த் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் பிரபல நடிகை ருக்மணி வசந்த் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இரண்டு நாயகிகள் உள்ள நிலையில், ருக்மணி குறித்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reports indicate that Rukmini Vasanth is set to join the cast of the film Dharman, starring Rajinikanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments