FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரசிகருக்கு விபூதி பூசிவிட்டு தானும் வைத்துக்கொண்ட ரஜினிகாந்த்!

வடபழனி முருகன் கோயில் விபூதி பிரசாதத்தை ரஜினிகாந்திடம் வழங்கிய ரசிகர்கள்.

Updated On : 15 ஜூலை 2026, 2:04 pm IST
ரசிகருக்கு விபூதி பூசிவிட்டு தானும் வைத்துக்கொண்ட ரஜினிகாந்த்! - படம்: விடியோ கிளிப்
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து, வடபழனி முருகன் கோயில் விபூதி பிரசாதத்தை அவரிடம் வழங்கினார்கள்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சிக்கு புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த அவரது ரசிகர்கள், அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்து, வடபழனி முருகன் கோயிலில் வாங்கிய விபூதி பிரசாதத்தை ரஜினிகாந்திடம் வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் உடனே, அந்த விபூதி பிரசாதத்தை எடுத்து வழங்கிய ரசிகருக்கு நெற்றியில் பூசிவிட்டு, தானும் வைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு உள்ளே வேகமாக புறப்பட்டு சென்றார்.

summary

Rajinikanth fans gave him an enthusiastic welcome at the Chennai airport and presented him with the Vibhuti prasadam from the Vadapalani Murugan Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments