நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா?
நடிகை ப்ரீத்தி முகுந்தன், கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா என்பது பற்றி..
ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் திரை நட்சத்திரமான நடிகை ப்ரீத்தி முகுந்தன், கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தி என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் பாதி உண்மைதான். சீனிவாச ராமானுஜத்தின் உறவினர்தான் ப்ரீத்தி முகுந்தன்.
நடிகை பிரீத்தி முகுந்தன், புகழ்பெற்ற இந்தியக் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் நெருங்கிய உறவுமுறை கொண்டவர்.
ஆனால், ராமானுஜத்துக்கு நேரடியான கொள்ளுப் பேத்தி இல்லை. ராமானுஜத்துக்கு பிள்ளைகள் இல்லை. அவரது மனைவி ஜானகி அம்மாள் வழியில்தான் ப்ரீத்தி முகுந்தன் உறவு முறையாகிறார்.
Advertisement
Advertisement
அதாவது, ராமானுஜத்தின் மனைவி ஜானகி அம்மாளால் பிற்காலத்தில் தத்தெடுக்கப்பட்ட மகனான டபிள்யூ.எஸ். நாராயணனின் குடும்பத்தைச் சேர்ந்த - அவருடைய பேத்திதான் ப்ரீத்தி முகுந்தன் என்பது தெரிய வந்துள்ளது.
தனுஷுடன் இணையும் ப்ரீத்தி முகுந்தன்
நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷின் 56-வது படம் உருவாகிறது. இப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை ப்ரீத்தி முகுந்தனைத் தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளதாம். பிளாஸ்ட் வெற்றிக்குப் பின் முக்கியமான நடிகையாகியுள்ள ப்ரீத்தி, நடிகர் தனுஷுடன் இணையவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே அவர் நடிப்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த திரைப்படமான இதயம் முரளி வெளியாகியிருக்கிறது. இதில், நாயகனாக நடிகர் அதர்வாவும் மற்றொரு நாயகியாக கயாடு லோஹர் நடித்திருந்தனர்.
முன்னதாக அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம், கடந்த மே மாதம் வெளியாகி வெற்றி பெற்றது. அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளிலும் அசத்தியிருந்தார்.
எந்தக் காதல் காட்சிகளும் இல்லாமல் முழுக்க, முழுக்க தன்னுடைய சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை ப்ரீத்தி முகுந்தன் காட்டியிருந்தார். இதுவரை அவரது அழகுக்கும் நடிப்புக்கும் ரசிகர்களாக இருந்து வந்தவர்கள், ப்ரீத்தியை, ஆக்ஷன் குயின் என்றும் ஆக்ஷன் அழகே என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
Is actress Preethi Mukundhan the great-granddaughter of mathematical genius Srinivasa Ramanujan?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.